

நாளுக்கு நாள் புதிய புதிய நோய்கள் உருவெடுத்தாலும் நெடுங்காலமாக உலகெங்கிலும் காணப்படும் மிகப்பெரிய சிக்கலாக மனநல பாதிப்பு நீடித்து வருகிறது. அதேநேரம் உலக அளவில் குறைந்த அல்லது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மனநலம் தொடர்பான சேவைகளை அணுக முடிவதில்லை. வளர்ந்த நாடுகளில் வாழ்பவர்கள் கூட மனநலம் தொடர்பான சேவைகள் பெறுவதில் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், மனநலம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க உலக மனநல கூட்டமைப்பால் அக்டோபர் 10-ம் தேதி உலக மனநல நாளாக அனுசரிக்கப்படுகிறது. 2018-ல் இருந்து உலகம் முழுவதும் மனநல நாள் அனுசரிக்கப்படுகிறது. 2022-ம் ஆண்டின் உலக மனநல நாளுக்கான கருப்பொருள் “அனைவருக்கும் மன ஆரோக்கியம், நல்வாழ்வை உலக அளவில் முன்னுரிமையாக மாற்றுதல்” என்பதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.