Published : 30 Sep 2022 06:00 AM
Last Updated : 30 Sep 2022 06:00 AM
மொழிபெயர்ப்பு இல்லை என்றால் மொழிகள் வளர்ந்திருக்காது. கருத்து பரிமாற்றம், சர்வதேச நாடுகளுக்கு இடையில் நல்லுறவு மேம்பட்டிருக்காது. இதனை முன்னிலைப்படுத்தும் விதமாக 2018 செப்டம்பர் 30-ல் இருந்து சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்பட்டு வருகிறது. வடகிழக்கு இத்தாலியைச் சேர்ந்த செயின்ட் ஜெரோம், புதிய ஏற்பாட்டின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் இருந்து பைபிளின் பெரும்பகுதியை லத்தீன் மொழியில் 5-ம் நூற்றாண்டில் மொழிபெயர்ப்பு செய்தார். மொழிபெயர்ப்பின் முன்னோடியாக அறியப்படும் ஜெரோம் 420 செப்டம்பர் 30-ல் இறந்தார். ஒவ்வொரு ஆண்டும், ஐக்கிய நாடுகள் சபை ஜெரோம் நினைவை போற்றும் வகையில் சர்வதேச அளவில் மொழிபெயர்ப்பு போட்டியினை நடத்தி இந்நாளை கொண்டாடுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT