

சுற்றுலாவை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. சுற்றுலா மூலம் பொருளாதாரம் விரிவடையும், உலக நாடுகளுக்குள் நல்லுறவு, மேம்படும் சமாதானம், கலாச்சாரம் என பட்டியல் நீளும். சுற்றுச்சூழல் மற்றும் மனித இனத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 1980 செப்டம்பர் 27-ம் தேதி சுற்றுலா தினமாக ஐ.நா சபை அறிவித்தது. கல்வி சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா என சுற்றுலாவில் பல வகை உண்டு. உலகின் மிகப்பெரிய தொழிலாக சுற்றுலா பார்க்கப்படுகிறது. பொருளாதார மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு சுற்றுலா துறைக்கு வளரும் நாடுகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. "ரீ திங்கிங் டூரிஸம்" (Rethinking tourism) என்பதுதான் சுற்றுலா துறையின் இந்த ஆண்டு முழக்கமாக உள்ளது.