

மங்கோலிய பேரரசன் செங்கிஸ்கானின் பேரன் குப்லாய்கான் 1215-ம்ஆண்டு செப். 23-ல்பிறந்தார். 1279-ல் நடைபெற்ற போரில் தென் சீனாவில் யுவான் சாங் வம்சத்தை கைப்பற்றினார். செங்கிஸ்கானின் வம்சாவளியில் தோன்றிய அடுத்த சக்திவாய்ந்த சீனப் பேரரசராக திகழ்ந்தார். நாட்டை வளமாக்கினார். தெற்கு ரஷ்யாவில் உள்ள கோல்டன் ஹோர்ட் மற்றும்பெர்சியாவின் இல்-கானேட்(இன்றைய ஈரான்) போன்றபிற மங்கோலிய கோட்டைகளை ஆட்சி செய்தார். "வைஸ் கான்" என்று அவருக்கு புனைபெயர் சூட்டி மகிழ்ந்தனர் மக்கள். உள்கட்டமைப்பு, மத சகிப்புத்தன்மை, மேற்கத்திய நாடுகளுடனான வர்த்தகப் பரிமாற்றம், காகிதப் பணபயன்பாடு என அவரது சிறந்த ஆட்சிக்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். மங்கோலிய மொழிக் கான புதிய எழுத்துக்களை உருவாக்கியவரும் இவரே.