Published : 22 Sep 2022 05:50 AM
Last Updated : 22 Sep 2022 05:50 AM
ஆந்திரா மாநிலம் செகந்திராபாத்தில் 1931 செப். 22-ம் தேதி ஜி. தியாகராஜன் பிறந்தார். 21 வயதில் சென்னையில் குடியேறி ஜெமினி ஸ்டுடியோவில் வேலைக்கு சேர்ந்தார். முழுநேர எழுத்தாளராக மாற முடிவெடுத்து 1966-ல் அசோகமித்திரன் என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கினார். மனித மனம் சிறுசிறு நிகழ்வுகளால் நிரப்பப்பட்டது என்பதை சொல்லும் இவரது கதைகள் சராசரியான மனித நிகழ்வுகள் சார்ந்ததாகவே இருக்கும். ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இவரது நூல்கள் மொழி பெயர்க்கபட்டுள்ளன. 9 நாவல்கள், 250 சிறுகதைகள், நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியுள்ளார். “அப்பாவின் சிநேகிதர்” சிறுகதை தொகுப்புக்காக 1996-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT