

ஜெர்மனியைச் சேர்ந்த அகஸ்ட்டி டெட்டர் (51) என்ற பெண்ணுக்கு சிகிச்சை அளித்தபோதுதான் அல்சீமர் எனும் நோய் முதன்முதலில் கண்டறியப்பட்டது. ஆனால், அந்த பெண்ணுக்கு மனநோய் என்று நினைத்தே மருத்துவர் அலாய்ஸ் அல்சீமர் அவருக்கு சிகிச்சை அளித்தார். அப்பெண் இறந்த பிறகு அவரது மூளையை மருத்துவர் அலாய்ஸ் அல்சீமர் மீண்டும் ஆராய்ச்சி செய்தபோது அவருக்கு ஏற்பட்டது மறதி நோய் என்பதை 1906-ல் கண்டறிந்தார். அதன் பிறகு அம்மருத்துவரின் பெயரிலேயே இந்நோய் அழைக்கப்பட்டது. வயதானவர்களை பாதிக்கும் அல்சீம்ரினால் தினமும் செய்யக்கூடிய செயல்களையே மறந்து மாற்றி செய்யும் நிலை உண்டாகும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த செப்டம்பர் 21-ம் தேதி அல்சீமர் விழிப்புணர்வு நாளாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.