

அன்னிபெசன்ட் அம்மையார் லண்டனில் 1847-ம் ஆண்டு பிறந்தார். சிறந்த எழுத்தாளர், மேடை பேச்சாளர். 1907-ல்சென்னை அடையாறில் உள்ள பிரம்மஞான சபைக்கு தலைவரானார். இந்தியா விடுதலை பெற வேண்டும் என்பதற்காக நியூ இந்தியா, காமன் வீல் போன்ற பத்திரிகைகளை நடத்தினார்.
1917-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ரவீந்திரநாத் தாகூர் ஆதரவுடன் சென்னையில் தேசிய பல்கலைக்கழகத்தை சில ஆண்டுகள் நடத்தினார்.
இந்தியா சுயாட்சி பெற வேண்டும் என்பதற்காக ஹோம் ரூல் இயக்கத்தை தொடங்கினார். இவ்வாறு பன்முகத்தன்மையுடன் விளங்கிய அன்னிபெசன்ட் அம்மையார் 1933-ம் ஆண்டு செப்.20-ல் சென்னை அடையாறு பகுதியில் வசிக்கும்போதே காலமானார்.