

ரஷ்யாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்றஎழுத்தாளர் லியோ டால்ஸ்டாய். நாவலாசிரியர், நாடகாசிரியர், கல்வி சீர்திருத்தவாதி, விமர்சகர், சிந்தனையாளர்என பல்வேறு முகங்களை கொண்டவர்.
ரஷ்யாவில் 9.9.1828அன்று பிறந்தார். பல்கலைக்கழக படிப்பை பாதியிலேயே நிறுத்தினாலும், தனக்குப் பிடித்தமான புத்தகங்களை அதிகம் படித்தார். ரூஸோவின் படைப்புகளை விரும்பி வாசித்தார். 16-வது வயதிலேயே எழுத தொடங்கிவிட்டார். ‘தி சைல்ட்ஹுட், பாய்ஹுட்’ நூல்களால் ரஷ்யா முழுவதும் புகழ் பெற்றார். "போரும் அமைதியும், அன்னா கரீனினா"ஆகிய நாவல்கள் டால்ஸ்டாயின் குறிப்பிடத்தக்க படைப்புகளாக கருதப்படுகின்றன. 1910-ம்ஆண்டு நவம்பர் 20-ம் தேதி 82-வயது வயதில் காலமானார்.