தேசிய விளையாட்டு தினம்

தேசிய விளையாட்டு தினம்
Updated on
1 min read

புகழ் பெற்ற ஹாக்கி வீரர் தயான் சந்த்தின் பிறந்தநாளான ஆகஸ்டு 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1905-ம் ஆண்டில் உத்தர பிரதேசம் அலகாபாத்தில் தயான் சந்த் பிறந்தார்.

1928 முதல் 1964 வரையிலான காலகட்டத்தில் நடந்த 8 ஒலிம்பிக் போட்டிகளில் தயான் சந்த் இடம்பெற்றிருந்த இந்திய ஹாக்கி அணி 7 போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வென்றது.

அவர் பங்கேற்ற 185 சர்வதேச ஹாக்கி போட்டிகளில் 570 கோல்கள் அடித்தார். ஒட்டுமொத்தமாக 1000 கோல்களுக்கு மேல் அடித்திருப்பதாக ‘Goal’ என தலைப்பிட்ட தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டும் உயரிய விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது இவரது பெயரிலேயே வழங்கப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in