

சுதந்திரப் போராட்ட வீரர், தமிழ் அறிஞர், நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்களின் பெயர் தெரியாதவர்கள் இருக்கக்கூடும். ஆனால், உப்பு சத்தியாகிரக போராட்டத்துக்காக அவர் இயற்றிய, “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” பாடலை கேளாதோர் அரிது. எளிய சொற்களால் கவிதைகள் பாடி தேசிய மற்றும் காந்திய கொள்கைகளை மக்களிடையே பரப்பியவர். தமிழகத்தின் முதல் அரசவை கவிஞர். திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவராக 1930-ல் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். 66 புத்தகங்கள் எழுதினார். பத்மபூஷண் விருது பெற்றார். சாகித்ய அகாடமியின் தமிழ்ப் பிரதிநிதியாக பொறுப்பு வகித்தார். இவரது “மலைக்கள்ளன்” நாவல் எம்ஜிஆர் நடிப்பில் திரைப்படமானது. 1972 ஆகஸ்டு 24-ம் தேதி மறைந்தார்.