ஆக.12: இன்று என்ன? - தேசிய நூலகர் தினம்

ஆக.12: இன்று என்ன? - தேசிய நூலகர் தினம்
Updated on
1 min read

இந்திய நூலகத்தின் தந்தை என அழைக்கப்படும் எஸ்.ஆர். ரங்கநாதனின் பிறந்த நாளான ஆகஸ்டு 12-ம் தேதி தேசிய நூலகர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் நூலகரான இவர் இங்கிலாந்து சென்று நூலக அறிவியலில் புதுமையைக் கற்றார்.

அக்காலத்தில் தமிழக நூலகங்களில் புத்தகங்களை பராமரிக்கும் ஒழுங்கமைப்போ போதிய ஊழியர்களோ இல்லை. இந்நிலையில், புத்தகங்களைப் பொருள் வாரியாக அடுக்குவதற்காக "கோலன் பகுப்பு முறை" என்ற முறையை ரங்கநாதன் கண்டுபிடித்தார். இந்த முறை நூலகங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.

நூலகவியலுக்கு இவர் ஆற்றிய பங்களிப்புக்காக இந்திய அரசு இவருக்கு பத்ம விருது வழங்கி கவுரவித்தது. தவிர இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு நூலகவியல் சார்ந்த உயர்தொழிற்கழகங்களில் உறுப்பினராக இருந்து உயர் பதவிகளையும் வகித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in