Published : 04 Aug 2022 06:00 AM
Last Updated : 04 Aug 2022 06:00 AM

ஆக. 04: இன்று என்ன? - பராக் ஒபாமா பிறந்த தினம்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பிறந்த தினம் இன்று. 2009-ல், ஆப்பிரிக்க-அமெரிக்கரான பராக் ஹுசைன் ஒபாமா அமெரிக்காவின் 44-வது அதிபராக பதவியேற்றார்.

இந்த உயரிய பதவிக்கு வந்த முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒபாமாதான். அதை அடுத்து 2013-லும் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக 2017 வரை பணியாற்றினார்.

உலகப் புகழ்வாய்ந்த கல்வி நிறுவனங்களான கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியிலும் பட்டங்கள் பெற்றவர்.

செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு 1992-2004 வரை சிகாகோ பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார். சிவில் உரிமைகளுக்கான வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். இந்தியாவுடன் தொடர்ந்து நட்பு பேணியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x