ஆக.1: இன்று என்ன? - பாலகங்காதர திலகர் நினைவு தினம்

ஆக.1: இன்று என்ன? - பாலகங்காதர திலகர் நினைவு தினம்
Updated on
1 min read

லோக் மான்ய பாலகங்காதர திலகர், இந்திய சுதந்திர போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி. இந்தியாவுக்கு முதன்முதலில் தன்னாட்சி கோரிய தலைவர்களில் ஒருவர்.

"சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்" என்பது திலகரின் புகழ்பெற்ற கூற்று. இந்திய தேசிய இயக்கத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார்.

மராத்தி மொழியில் விற்பனையில் சாதனை படைத்த ‘கேசரி’ பத்திரிகையை 1881-ல் தொடங்கி விடுதலை வேட்கையோடு நடத்தி வந்தார். 1890-ல் காங்கிரஸில் சேர்ந்தார். 1908-ல் அவர் கேசரியில் எழுதிய தலையங்கத்தை காரணம் காட்டி ஆங்கில அரசு கைது செய்தது.

ஜெர்மனியின் மாக்ஸ் முல்லரின் உதவியால் விடுதலை ஆனார். 1919-ல் இங்கிலாந்து சென்றவர் ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கேள்விப்பட்டு நாடு திரும்பினார். 1920 ஆகஸ்டு 1-ம் தேதி மறைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in