ஜூலை 27: இன்று என்ன? - அப்துல் கலாம் நினைவு தினம்

ஜூலை 27: இன்று என்ன? - அப்துல் கலாம் நினைவு தினம்
Updated on
1 min read

தமிழ்நாடு ராமேசுவரத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து, இஸ்ரோ விஞ்ஞானியாக வளர்ந்து, பிறகு நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் டாக்டர் அப்துல் கலாம். இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக 2002 முதல் 2007 வரை திறம்பட பணியாற்றினார்.

“ஏவுகணை விஞ்ஞானி”, “மக்களின் குடியரசுத் தலைவர்” என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். அவரது “அக்னி சிறகுகள், இந்தியா 2020” உள்ளிட்ட புத்தகங்கள் பல இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டக்கூடியதாக திகழ்கிறது.

1981-ல் பத்ம பூஷண், 1990-ல் பத்ம விபூஷண், 1997-ல் பாரத ரத்னா விருது பெற்றவர்.

மாணவர்களுடன் உரையாடுவதில் பேரார்வம் கொண்டிருந்தார். அவ்வாறே 2015 ஜூலை 27-ம் தேதி ஷில்லாங் ஐஐஎம்-ல்மாணவர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மறைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in