

கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் அப்போதைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் பகுதியில் ஊடுருவி அப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்தனர். இதனால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் போர் மூண்டது.
கார்கில் பகுதியை மீட்க ‘விஜய் நடவடிக்கை' என்கிற பெயரில் பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. மிக உயர்ந்த மலைத்தொடரில் மிகுந்த சவால்களை எதிர்கொண்டு போர் நடந்தது.
அப்போரில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலர் பலியாயினர். இந்திய தரப்பிலும் 543 ராணுவத்தினர் வீர மரணம் அடைந்தனர்.
கார்கிலை மீட்டு வெற்றி கண்ட நாள் 1999 ஜூலை 26-ம் தேதி ஆகும். கார்கில் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக ஜூலை 26-ம் தேதி ஆண்டுதோறும் கார்கில் வெற்றி தினமாகக் கொண்டாடப்படுகிறது.