ஜூலை 21: இன்று என்ன? - “கிழவனும் கடலும்” எழுதிய எர்னஸ்ட் ஹெமிங்வே பிறந்தநாள்

ஜூலை 21: இன்று என்ன? - “கிழவனும் கடலும்” எழுதிய எர்னஸ்ட் ஹெமிங்வே பிறந்தநாள்
Updated on
1 min read

நோபல் பரிசு புகழ் அமெரிக்க எழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் பத்திரிகையாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே. இவர் 1951-ல் எழுதிய "தி ஓல்ட் மேன் அண்ட் தி சீ" (The Old Man and the Sea) புலிட்சர் விருதை வென்றது.

“கிழவனும் கடலும்” என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது போல உலகின் பல மொழிகளில் இந்த நாவல் வெளிவந்துள்ளது. "ஏ ஃபேர்வெல் டு ஆர்ம்ஸ்" ‘ஃபார் ஹும் தி பெல் டோல்ஸ்’ ஆகியன அவரது இதர புகழ்பெற்ற நாவல்கள்.

1954-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். இவரது மறுபக்கம் இன்னமும் சுவாரசியமானது. முதலாம் உலகப்போரின் போது இத்தாலி ராணுவத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராகவும் இரண்டாம் உலகப்போரின்போது போர்முனை செய்தி யாளராகவும் பணிபுரிந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in