

சர்வதேச செஸ் கூட்டமைப்பு 1924-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி உருவாக்கப்பட்டது. அந்நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 20-ம் தேதி சர்வதேச செஸ் தினமாக 1966-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த யோசனையை யுனெஸ்கோ அமைப்பு முன்மொழிந்தது. 1851-ம்ஆண்டில் லண்டனில் முதலாவது நவீன செஸ் தொடர் நடத்தப்பட்டது. இதில், ஜெர்மனியைச் சேர்ந்த அடோல்ப் ஆண்டர்சன் வென்றார்.
செஸ் விளையாட்டை கண்டுபிடித்த நாடு இந்தியா என்று சொல்லப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டபோது ‘சதுரங்கா’ என்றே செஸ் பெயரிடப்பட்டது. அதே நேரம் ரஷ்யா, சீனா, மத்திய ஆசிய நாடுகள், பாகிஸ்தான் ஆகியவற்றிலும் செஸ் விளையாட்டின் வெவ்வேறு அம்சங்கள் காணப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் காணப்படுகிறது.