

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் பி.வி.சிந்து. 2016-ல் பிரேசில் தலைநகர் ரியோ-டி-ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பாட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்த சாதனையைப் படைத்தார் தெலங்கானாவைச் சேர்ந்த பி.வி.சிந்து.
2021 டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறு படைத்தார். ஹைதராபாத் நகரில் 1995-ல் ஜூலை 5-ம் தேதி பிறந்தார்.
தனது 17 வயதில் உலகின் தலைசிறந்த 20 பாட்மிண்டன் வீராங்கனைகளின் தரைவரிசைப்பட்டியலில் 2012-ல் இடம்பிடித்தார். மத்திய அரசுக்கு இவருக்குப் பத்ம, பத்ம பூஷன் விருதுகள் வழங்கிச் சிறப்பித்தது.