

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 12.01.1863 அன்று பிறந்தவர் சுவாமி விவேகானந்தர். அவரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா.
ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டு ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரானார். 1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆற்றிய சொற்பொழிவு மிகவும் பிரசித்தி பெற்றது. "செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று.
உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்" என்று தன்னம்பிக்கைக்கு மறுபெயராக உயர்ந்து நின்றவர்.
இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞான ஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்த சுவாமி விவேகானந்தர் 04.07.1902 அன்று மரணம் அடைந்தார்.