

தமிழ் இலக்கியத்தில் பெரும் வாசகர் பரப்பைக் கொண்டுள்ள எழுத்தாளர்களில் ஒருவர் சுஜாதா. எஸ்.ரங்கராஜன் எனும் இயற்பெயருடைய இவர், சுஜாதா என்ற பெயரிலேயே தனது நூல்களை எழுதியுள்ளார். இவர் 1935 மே 3-ல் சென்னையில் பிறந்தார். தனது சிறுவயதை திருச்சி ரங்கத்தில் கழித்துள்ளார்.
சுஜாதா தனது அறிவியல் புனைக்கதைகள் மூலம் நன்கு அறியப்பட்டவர். நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள் மட்டுமல்லாமல் திரைப்படங்களில் வசனம் என பல்வேறு தளங்களில் செயல்பட்டுள்ளார். தமிழ் இலக்கிய உலகில் பெரும்பணிகளைச் செய்துள்ள இவர் 2008 பிப்ரவரி 27 அன்று காலமானார்.