

தொழில்நுட்ப உலகில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை அமைத்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். எத்தனை நிறுவனங்கள் வந்தாலும் என்றுமே உச்சத்தில் இருந்து கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜாப்ஸ், ஒரு கண்டுபிடிப்பாளர், வடிவமைப்பாளர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர்.
இவர் ஒரு சுவாரஸ்யமான வாழ்க்கைக்கு சொந்தக்காரர். தனது சிறுவயதில் இருந்தே வினோதமாக சிந்திக்கக் கூடியவர். தனது கல்லூரி படிப்பை நிறைவு செய்யாமல் வெளியேறினார்.
பின்னர் ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கி நவீன தொழில்நுட்பத்துக்கு புதிய வெளிச்சம் பாய்ச்சினார். ஜாப்ஸ் 1955 பிப்ரவரி 24 அன்று கலிபோர்னியாவில் பிறந்தார்.