

இந்தியாவில் தொடக்க கால அறிவியல் துறைக்கு அடித்தளமிட்டவர்களில் ஓருவர் வேதியலாளர் சாந்தி ஸ்வரூப் பட்நாகர். இவர் பஞ்சாபின் ஷாபூரில் உள்ள பெராவில் 1894 பிப்ரவரி 21-ம் தேதி பிறந்தார்.
இந்திய விடுதலைக்கு பின் அமைக்கப்பட்ட ‘அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின்’ முதல் இயக்குநராக பணியாற்றியவர். இவர் இந்தியாவின் ‘ஆய்வு மையங்களின் தந்தை’ என்றும் அறியப்படுகிறார். இங்கு ஆய்வு மையங்கள் உருவாக காரணமாக இருந்துள்ளார்.
மத்திய அரசு இவருக்கு 1954-ல் பத்ம பூஷண் விருது வழங்கியது. அறிவியல் துறையில் வழங்கப்படும் ‘சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது’ இவரது பெயரால் வழங்கப்படுகிறது.