Published : 19 Feb 2020 07:57 AM
Last Updated : 19 Feb 2020 07:57 AM

இன்று என்ன நாள்? - ‘தமிழ்த் தாத்தா’ பிறந்த தினம்

தன் வாழ்வின் பெரும் பகுதியை தமிழுக்காகவே கழித்தவர் ‘தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாதய்யர். தமிழ் மொழியில் ஐம்பெரும் காப்பியங்களையும், சங்க இலக்கியங்களையும் தேடித் தேடி 90-க்கும் மேற்பட்ட நூல்களை பதிப்பித்தார். மேலும் பல்வேறு ஓலைச்சுவடிகளை சேகரித்து தொகுத்து தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கியுள்ளார்.

இவர் தொடக்கக் கல்விக்கு பின், 17-வது வயதில் தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் 5 ஆண்டு காலம் தமிழ் பயின்றார். தான் வாழ்ந்த தமிழ் வாழ்க்கையை, ‘என் சரிதம்’ என்ற நூலில் மிக அருமையாகப் பதிவு செய்துள்ளார். தஞ்சாவூர் உத்தமதானபுரத்தில் 1855 பிப்ரவரி 19-ல் பிறந்தவர் தமிழ்த் தாத்தா உவேசா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x