

தமிழ் மொழி குறித்து ஆராய்ந்த அறிஞர்களில் ஒருவர் ச.வையாபுரிப் பிள்ளை. தமிழில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். இதில் ஆய்வுக் கட்டுரைகள், திறனாய்வுகள், கால மொழி ஆய்வுகள், மொழிபெயர்ப்பு, சொற்பொழிவுகள் ஆகியவற்றை செய்துள்ளார். கதைகள், கவிதைகள் உட்பட ஏராளமான படைப்புகளையும் கொடுத்துள்ளார். இவர் 1891 அக்டோபர் 12-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தார்.
இவர் வழக்குரைஞராகப் சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பல இலக்கிய ஆய்வு கட்டுரைகளை எழுதினார். சிறந்த பதிப்பாளராகவும் அறியப்பட்டார். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ் அகாராதி தயாரிப்புக் குழுவின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். தமிழ்த்துறை முன்னோடிகளில் ஒருவரான வையாபுரிப் பிள்ளை 1956 பிப்ரவரி 17-ம் தேதி காலமானார்.