

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஓங்கி ஒலித்த பெண் குரல் சரோஜினி நாயுடு. அன்றைய கால கட்டத்தில் முக்கியமான அரசியல் செயல்பாட்டாளராகவும் கவிஞராகவும் விளங்கினார்.
இவரது செயல்பாடுகள் குடியுரிமை, பெண் விடுதலையை நோக்கியே இருந்தன. குறிப்பாக ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இருந்தார். இவர் ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றே அழைக்கப்பட்டார்.
சரோஜினி அடிப்படையில் காந்தியின் வழியை பின்பற்றினார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேபோல் ஒருங்கிணைந்த இந்தியாவின் முதல் பெண் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார். இவர் 1879 பிப்ரவரி 13 அன்று ஹைதராபாதில் பிறந்தார்.