இன்று என்ன நாள்
இன்று என்ன நாள்: ஜி.யு.போப் நினைவு தினம்
தமிழ் மொழியை பொறுத்தளவில் அதன் வளர்ச்சியை உலகறிய செய்ததில் தமிழை தாய்மொழியாக கொண்ட அறிஞர்களுக்கு இணையாக அயல் நாட்டு தமிழ் அறிஞர்களும் உழைத்துள்ளனர்.
அந்த வகையில் முக்கியமான ஒருவர் ஜி.யூ.போப். இவர் கனடாவில் 1820 ஏப்ரல் 24-ல்பிறந்தார். ஒரு கிறிஸ்துவ மதபோதகராக 1839-ல் தமிழ்நாட்டுக்கு வந்தார்.
தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் உட்பட பல மொழிகளையும் கற்றார். தமிழ் மொழி மீது மிகுந்த பற்று கொண்ட போப், தமிழுக்காக சுமார் 40 ஆண்டு காலம் சேவை செய்துள்ளார்.
பல சிறப்புகள் உள்ள தமிழை உலகறியச் செய்யும் விதமாக மொழிபெயர்க்க நினைத்தார். அப்படியாக திருக்குறள், திருவாசகம் உட்பட பல நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். போப் 1908 பிப்ரவரி 12 அன்று இங்கிலாந்தில் காலமானார்.
