

நவீன ரஷ்ய இலக்கியத்தின் முன்னோடி என்று அழைக்கப்படுபவர் அலெக்ஸாண்டர் புஷ்கின். இவர் கவிதை, நாவல், சிறுகதை, நாடகம் என பல்வேறு துறைகளில் இயங்கியுள்ளார்.
ரஷ்ய நாட்டின் சிறந்த எழுத்தாளர்கள் கொண்ட பட்டியலில் நிலைத்திருப்பவர் புஷ்கின். இவர் 1799 ஜூன் 6-ம் தேதி மாஸ்கோவில் பிறந்தார்.
புஷ்கின் தனக்கென்று தனித்துவமான எழுத்து நடையும் கதை சொல்லும் முறையும் கொண்டிருந்தார்.
இது பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
புஷ்கின் ரஷ்ய இலக்கியத்தில் பெரும் பங்கு வகித்துள்ளார். இவர் 1837 பிப்ரவரி 10-ம் தேதி பீட்டர்ஸ்பர்க் நகரில் காலமானார்.