

தமிழ் மொழி என்றும் தனித்து இயங்கக் கூடியது என்று உறுதியாகத் தெரிவித்த தமிழ் அறிஞர்களின் உழைப்பு முக்கியமானது. இதில் தமிழ் அறிஞர் மொழி ஞாயிறு தேவநேய பாவாணரின் பங்கு அளப்பரியது.
இவர் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் 1902 பிப்ரவரி 7-ம் தேதி பிறந்தார். தமிழ் மீது கொண்ட பற்றினால் தேவநேசன் என்ற தனது இயற்பெயரை தேவநேய பாவாணர் என்று மாற்றிக் கொண்டார்.
தமிழ்மொழியில் கலந்திருக்கும் வடமொழிச் சொற்கள் குறித்து நன்கு ஆய்வு செய்தவர். இயல்பாக பேசுவதில் கூட தூய தமிழ் சொற்களையே பயன்படுத்தியுள்ளார்.
இவர் திருச்சியில் 1968-ல் ‘உலகத் தமிழ் கழகம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். தமிழ் குறித்த பல்வேறு ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார். சென்னை அண்ணா சாலையில் இவரது பெயரில் மாவட்ட நூலகம் ஒன்று உள்ளது.