

இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட எண்ணற்ற தலைவர்களில் ஒருவர் மோதிலால் நேரு. இவர் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் 1861 மே 6-ம் தேதி பிறந்தார்.
தனது சிறு வயதை ராஜஸ்தானில் கழித்தார். பின்னர் கான்பூரில் பள்ளிப் படிப்பையும் அலகாபாத்தில் சட்டப் படிப்பையும் முடித்தார். சட்டப் பயிற்சியை 1883-ம்ஆண்டு கான்பூரில் முடித்த பிறகு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை தொடங்கினார்.
இவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் தந்தை. சுதந்திர போராட்டத்தில் ஒரு முக்கிய அங்கம் வகித்தவர். காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
மோதிலால் நேரு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். 1931 பிப்ரவரி 6-ம் தேதி லக்னோவில் காலமானார்.