இன்று என்ன நாள்
இன்று என்ன நாள்: இடுப்பு ஒட்டி பிறந்த ஹில்டன் சகோதரிகள்
டெய்சி ஹில்டன் மற்றும் வைலெட் ஹில்டன் சகோதரிகள் பிரபலமானவர்கள். தமிழில் ‘மாற்றான்’ திரைப்படத்தில் வருவது போல் இவர்களும் இடுப்புப் பகுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள். இருவருக்குமான ரத்த ஓட்டமும், நரம்பு தொகுதிகளும் ஒன்று தான்.
இவர்கள் இங்கிலாந்தில் உள்ள பிரைடன் நகரத்தில் 1908 பிப்ரவரி 5-ம் தேதி பிறந்தனர். இவர்களின் தாய் பொருளாதார சிக்கலால் வேறொருவருக்கு விற்றுவிட்டார். வளர்த்தவர்கள் இந்த சகோதரிகள் மூலம் நிகழ்ச்சிகள் நடத்தி பணம் சம்பாதித்தனர். இவர்கள் 60வயதில் காலமானார்கள்.
