இன்று என்ன நாள்: அறிஞர் அண்ணா நினைவு தினம்

இன்று என்ன நாள்: அறிஞர் அண்ணா நினைவு தினம்
Updated on
1 min read

தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் அண்ணா என்று அழைக்கப்படும் சி.என்.அண்ணாதுரை. இவர் 1909 ஜனவரி 14-ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார்.

மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஆவார். நாவல், கட்டுரை, நாடகம் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரது நாடகங்கள் இன்று வரை பலராலும் வாசிக்கப்படுகிறது. தமிழ்மொழி மீது மிகுந்த பற்றுடைய இவர் ஒரு இதழாளர் மற்றும் மிகச் சிறந்த பேச்சாளர்.

திராவிட முன்னேற்ற கழகம் என்று தனிக் கட்சியை தொடங்கினார். இந்திய அரசியல் தளத்தில் ‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாச்சி’ என்பதை முன்வைத்தவர்.

பிரதான ஆளுமையாக திகழ்ந்த இவர், 1969 பிப்ரவரி 3-ம் தேதி காலமானார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in