இன்று என்ன? - பண்டிதர் சவரிராயர் பிறந்த தினம்

இன்று என்ன? - பண்டிதர் சவரிராயர் பிறந்த தினம்
Updated on
1 min read

உலக மொழிகளில் தமிழ் உயிர்ப்போடும் தனித்துவமாகவும் இருப்பதற்கு தமிழறிஞர்கள் பலர் நடத்திய ஆய்வுகளே காரணம். இவர்கள் தமிழுக்காக தங்களது தீரா உழைப்பை வழங்கியுள்ளனர். அவர்களில் பண்டிதர் சவரிராயரும் ஒருவர்.

இவர் 1859 ஜனவரி 20-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தில் பிறந்தார். இளமையில் தமிழ்ப் புலவர் செபாசுதியன் பிள்ளையிடம் தமிழ்ப் பயின்றார்.

தூத்துக்குடியில் ஒரு தொடக்கப் பள்ளியில் இருந்து தனது ஆசிரியர் பணியை தொடங்கினார். இதையடுத்து 20 ஆண்டுகளுக்கு மேல் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.

இவர் தமிழின் தொன்மை குறித்து பல ஆராய்ச்சிகள் செய்துள்ளார். தமிழ் ஆய்வுகள் குறித்து ஆங்கில இதழ்களில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in