Published : 10 Jan 2020 08:12 AM
Last Updated : 10 Jan 2020 08:12 AM

இன்று என்ன? - டைரி எழுதிய அனந்தரங்கம் பிள்ளை நினைவு தினம்

அனந்தரங்கம் பிள்ளை சென்னையில் உள்ள பெரம்பூரில் கடந்த 1709 மார்ச் 30-ம் தேதி பிறந்தார். அவரது நினைவு நாள் இன்று. புதுவையில் குடியேறி அரசுப் பணியில் சேர்ந்து திவானாகப் பதவி உயர்வு பெற்றார். அனந்தரங்கம் பிள்ளைக்கு, அன்றாட நிகழ்வுகளைக் குறிப்பாக எழுதி வைக்கும் (டைரி) பழக்கம் உண்டு.

பின்னர் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். பதினெட்டாம் நூற்றாண்டில் பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும் ஆவணமாகவும் இலக்கியமாகவும் திகழக்கூடிய நாட்குறிப்புகளைத் தந்தவர்.

கடந்த 1736 முதல் 1761 வரை 25 ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார். இவரது நாட்குறிப்புகள் 18-ம் நூற்றாண்டின் வரலாற்றை அறிந்து கொள்ளப் பெரிதும் துணையாக இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x