இன்று என்ன? - சுந்தர்லால் பகுகுணா பிறந்த தினம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

இந்தியச் சுற்றுச்சூழலியலாளர்களில் முக்கியமானவர் சுந்தர்லால் பகுகுணா. இவர் 1927 ஜனவரி 9-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி எனும் கிராமத்தில் பிறந்தார். சுந்தர்லால் அடிப்படையில் ஒரு காந்தியவாதி. அகிம்சை, உண்ணாவிரதம் போன்ற காந்தியின் வழிமுறைகளில் போராட்டங்கள் நடத்தியவர்.

இந்தியாவின் சுற்றுச்சூழல் வரலாற்றில் மரங்களை காப்பதற்காக பெண்களால் முன்னெடுக்கப்பட்டு இன்றளவும் பேசப்பட்டு வரும் ‘சிப்கோ’ இயக்கத்தை உருவாக்கினார். காடுகள், மரங்கள், ஆறுகள் என அனைத்து இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் வகையில் செயல்பட்டுள்ளார்.

இவரது செயல்களை போற்றும் விதமாக 1981-ல் பத்மஸ்ரீ மற்றும் 2009-ல் பத்மவிபூஷண் விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in