

நம் குழந்தைப் பருவத்தின் பொழுதுப்போக்கு அம்சத்தில் முக்கியமானது கார்ட்டூன் படங்கள். இதில் அனைவரது விருப்பான கதாபாத்திரங்கள் மிக்கி மவுஸ், டொனால்ட் டக் போன்றவை நம் மனதில் ஆழமாக பதிந்தவை.
இதுபோன்ற ரசனையான என்றும் நிலைத்திருக்கும் கதாபாத்திரங்களை உருவாக்கியவர் வால்ட் டிஸ்னி.
இவர் 1901 டிசம்பர் 5-ம் தேதி சிகாகோ நகரில் பிறந்தார். இவரது அமெரிக்கன் அனிமேஷன் தொழிற்சாலைதான் கார்ட்டூன் உலகின் முன்னோடியாக உள்ளது.
டிஸ்னி மிகச்சிறந்த ஓவியர், தொழிலதிபர், அனிமேட்டர், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இன்றைய உலகில் சிறந்து விளங்கும்
குழந்தைகள் பொழுதுப்போக்குத் துறைக்கு அடித்தளமிட்டவர்.