

இன்றைய நவீன காலத்தில் தகவல் பரிமாற்றம் என்பது மிக எளிதாக மாறிவிட்டது. ஆனால், முன்பு அஞ்சல் மூலமே அதிகமாக தகவல் பரிமாற்றம் நடந்தது. கடிதப் போக்குவரத்து என்பது மிக சுவாரசியமானதாக விளங்கியது. உள்ளபடியே அஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியவர் ரோலண்ட் ஹில். இவர் 1795-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.
இவர் தொடக்கத்தில் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். பின்னர் 1837-ம் ஆண்டு அஞ்சல் அலுவலக சீர்திருத்தத்தை மேற்கொண்டார். இதன்படி அச்சடிக்கப்பட்ட கடித உறை, அஞ்சல் தலை வெளியிட வேண்டிய அவசியத்தை சுட்டிக் காட்டினார். இவரது அஞ்சல் சீர்திருத்தம் உலகம் முழுவதும் விரிவடைந்து, தற்போது வெவ்வேறு பரிமாணங்களை எடுத்துள்ளன என்பது சிறப்பு.