

தமிழை வளர்த்தெடுத்த அறிஞர்களில் ஒருவர் பரிதிமாற் கலைஞர். இவர் 1870-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி மதுரையில் உள்ள விளாச்சேரியில் பிறந்தார். தமிழ் மீது கொண்ட தீராத பற்றினால் ‘சூரிய நாராயண சாஸ்திரி’ என்ற வடமொழி கலந்த தனது பெயரை பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக் கொண்டார்.
உயரிய செந்தமிழ் நடையில் பேச்சு, எழுத்து, நாடகம் இயற்றுதலில் புலமை பெற்றிருந்தார். தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தார். தமிழ் வரலாற்று நூல்கள், நாடக நூல்கள் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். இவரது நூல்கள் 2006-ம்
ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி தமிழ்நாடு அரசால் அரசுடமையாக்கப்பட்டன.