

உலக அறிவியல் துறையில் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தகாரர் தாமஸ் ஆல்வா எடிசன். இவரது ஆக்கங்களில் ஒன்று கிராமபோன்.
இந்த கருவி ஒலியை பதிவு செய்து, அதை கேட்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை முதலில் பிரெஞ்சு அறிவியலாளர் சார்லஸ் குரொஸ் என்பவர்தான் கண்டுபிடித்தார். ஆனால், இவரால் செயல்முறை விளக்கம் கொடுக்க முடியவில்லை.
எடிசன் இதை தனிபட்ட முறையில் ஆய்வு செய்து முதல் கிராமபோனை 1877-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி எடிசன் கண்டுபிடித்தார். நவம்பர் 29-ம் தேதி பொதுமக்கள் முன்னிலையில் முதல் முறையாக காட்சிப்படுத்தி விளக்கம் அளித்தார்.