இன்று என்ன நாள்?- ஐராவதம் மகாதேவன் நினைவு தினம்

இன்று என்ன நாள்?- ஐராவதம் மகாதேவன் நினைவு தினம்
Updated on
1 min read

தமிழ்நாட்டில் மிக முக்கியமான கல்வெட்டு ஆராய்ச்சியாளராக விளங்கியவர் ஐராவதம் மகாதேவன். இவர் 1930-ல்திருச்சியில் உள்ள மணச்சநல்லூரில் பிறந்தார். இவர் ஆராய்ச்சிக்கு வருவதற்கு முன் 1954 முதல் 1981 வரை சுமார் 27 ஆண்டுகள் இந்திய ஆட்சிப் பணியில் (ஐஏஎஸ்) இருந்துள்ளார். அதற்கு பின் தினமணி நாளிதழின் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.

சிந்து எழுத்துகள், பிராமி எழுத்துகள் குறித்து ஆய்வுகளை செய்துள்ளார். இவருக்கு 1970-ல் கிடைத்த நேரு உதவித்தொகையில் சிந்து சமவெளி எழுத்துகள் குறித்த ஆய்வை மேற்கொண் டார். இவரது சிறந்த பங்களிப்புக்காக பத்ம விருது வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in