

முஸ்லிம் மன்னர்களில் மிகவும் கவனம் பெற்றவர் திப்பு. இவர் 1750-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள தேவனஹல்லியில் பிறந்தார்.
இவர் மைசூர் மன்னரான ஹைதர் அலியின் புதல்வர். இவரது மறைவுக்கு பின் மைசூர் சாம்ராஜ்ஜியத்தின் மன்னராக முடிசூடினார். திப்பு மைசூரின் புலி என்று அழைக்கப்பட்டார்.
இவரது ஆட்சிக் காலத்தில் கப்பல் கட்டும் தளம், பொது விநியோகத் திட்டம் போன்றவை கொண்டு வரப்பட்டன.
இரண்டாம் ஆங்கில - மைசூர் போரில் வெற்றி பெறுவதற்கு பெரிதும் காரணமாக விளங்கினார். அப்போது ஆங்கிலேயர்களுக்கு பெரிய அச்சுறுத்தலாகவே இருந்தார் திப்பு சுல்தான்.