

பொதுவாக வயது அதிகரிக்கும் போது சில கட்டுப்பாடுகளும் சேர்ந்தே வருகின்றன. அதிலும் 50 வயதை கடந்த பெரும்பாலானோர் நீரிழிவு நோய்க்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பார்கள். தற்போது அதன் நிலை மாற்றமடைந்துவிட்டது. அதாவது 50 வயது என்ற அளவுகோள் 40, 30 என்று குறைந்து கொண்டே வருகிறது.
இது குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சர்வதேச நீரிழிவு நோய் அமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து செயல்பட்டுவருகின்றன.
நீரிழிவு நோய்க்கான இன்சுலின் கண்டுபிடித்தவர் களில் ஒருவரான சர் ப்ரெட்ரிக் பான்டிங்கின் பிறந்த நாளை போற்றும் விதமாக நவம்பர் 14-ம் தேதி ‘உலக நீரிழிவுநோய் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. உணவில் கவனம் செலுத்தினால் நீரிழிவை தடுக்கலாம்.