இன்று என்ன நாள்?- தேசிய கல்வி தினம்

இன்று என்ன நாள்?- தேசிய கல்வி தினம்
Updated on
1 min read

இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினமான இன்று (நவம்பர் 11-ம்) தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது.

இந்திய விடுதலைக்குப் பிறகு உருவான அரசில், முதல் கல்வி அமைச்சராக பணியாற்றியவர். அனைவருக்கும் இலவச ஆரம்பக் கல்வி கிடைக்கவும் நவீன கல்வி முறைக்கும் வித்திட்டவர் ஆசாத். இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் நிறுவுவதற்கும், பல்கலைக்கழக மானியக் குழு அமைவதற்கும் பாடுபட்டார்.

உயிரோடு இருந்த போது இவருக்கு பாரத ரத்னா விருது வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், தாம் பாரத ரத்னா விருது தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தமையால் மறுத்துவிட்டார். அவர் மறைந்த பிறகு இந்தியாவின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in