

மகாத்மா காந்தியின் போராட்ட வாழ்க்கை தென்னாப்பிரிக்காவில்தான் முதன்முதலில் உயிர்ப்பெற்றது. அறவழிப் போராட்டத்தின் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார் அவர். தன்னுடைய இளமை காலத்தில் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தபோதே போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார் அவர். இந்தியா திரும்புவதற்கு முன் அங்கு அவர் நடத்திய இறுதி சத்தியாகிரகம் 1913 -ம் ஆண்டில் நடந்தது.
ஒப்பந்த அடிப்படையில் தென்னாப்பிரிக்காவில் பணி புரிந்த இந்தியச் சுரங்கத் தொழிலாளர்கள் உட்படத் தோட்டம் மற்றும் ரயில்நிலையத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார் காந்தி. அப்போது நடால் மாகாண எல்லையை கடந்து டிரான்ஸ்வால் மாகாண எல்லைக்குள் நுழைந்த போது 1913-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி கைது செய்யப்பட்டார்.