Published : 30 Oct 2019 09:00 AM
Last Updated : 30 Oct 2019 09:00 AM

இன்று என்ன நாள்?- வாஸ்கோட காமா

வாஸ்கோட காமா கடல் வழியாக இந்தியாவுக்கு வந்த முதல் ஐரோப்பியர். போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இவர், கி.பி. 1497-ல் 170 பேர் கொண்ட குழுவோடு பயணம் செய்தார். 1498-ம் ஆண்டு மே 20-ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடில் தரையிறங்கினார். இங்குள்ள மிளகு, ஏலக்காய் ஆகிய வாசனைப் பொருட்களை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்தார். 1498-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி கோழிக்கோடில் இருந்து வெளியேறினார். இந்தியா போர்ச்சுக்கீயர்கள் கட்டுபாட்டில் இருந்தபோது காமா வைசியராய் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அப்போது கி.பி.1524-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி மீண்டும் கோழிக்கோடு வந்தார் காமா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x