Published : 01 Feb 2024 04:00 AM
Last Updated : 01 Feb 2024 04:00 AM

இன்று என்ன? - திகில் படங்கள் எடுக்கத் தூண்டியவர்

இங்கிலாந்து பெண் எழுத்தாளர், நாவலாசிரியர் மேரி ஷெல்லி. இவர் 1797-ல்லண்டனில் பிறந்தார். புகழ்பெற்ற ஆங்கில கவிஞரான ஷெல்லியின் மனைவி ஆவார்.

நாவல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், பயண இலக்கியங்கள் எழுதியுள்ளார். கணவர் ஷெல்லியுடன் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை ஆறு வார சுற்றுப்பயணத்தின் வரலாறு என்ற தலைப்பில் 1817-ல் புத்தகமாக வெளியிட்டார்.

1818-ல் மேரி தன்னுடைய பெயரில் முதல் நாவலான பிராங்கென்ஸ்டைன்-ஐ வெளியிட்டார். திகில் நிறைந்த புதினமாக எழுதினார். இதனை தழுவி உலகெங்கிலும் பல திகில் திரைப்படங்கள் பிற்காலத்தில் எடுக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று 1990-ல் தமிழில் வெளிவந்த ‘அதிசய மனிதன்’ திரைப்படம்.

வால்பெர்கா, பெர்கின் வார்பெக்கின் உள்ளிட்ட பல நாவல்களை மேரி ஷெல்லி எழுதியுள்ளார். மருத்துவத்துறை சமாளிக்க முடியாத அளவு ஊரெங்கும் பரவிய பிளேக் நோய் தொற்றை மையப்படுத்தி 1826-ல் அவர் எழுதிய ‘தி லாஸ்ட் மேன்’ நாவல் அவருக்கு அழியா புகழைத் தேடித் தந்தது. 1851 பிப்ரவரி 1-ம் தேதி காலமானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x