

ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் பி.வி.அகிலாண்டம். இவர் 1922-ம்ஆண்டு புதுக்கோட்டை பெருங்களூரில் பிறந்தார். அகிலாண்டம் என்ற பெயரை அகிலன் என்று அழைத்தனர்.
பள்ளி படிப்பு முடிக்கும் முன்பே தந்தை இறந்த காரணத்தால் புதுக்கோட்டையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நகல் எடுக்கும் வேலை செய்தார். சமூகம் மீது அக்கறை இருந்ததால் சக்தி வாலிபர் சங்கம் தொடங்கினார். இதன் மூலம் கள்ளுக்கடை மறியல், அந்நிய துணிகள் புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டார்.
1938-ல் ’அவன் ஏழை’ என்ற தலைப்பில் முதல் சிறுகதை எழுதினார். 1958-ல் பாவை விளக்கு என்ற நாவல் கல்கியில் தொடராக வெளிவந்தது. மலேசியாவுக்கு பயணம் செய்த இவர் ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் துயரமான வாழ்க்கையை பால்மரக்காட்டினிலே என்ற நாவலாக எழுதினார்.
அனைத்திந்திய வானொலி நிலையத்தில் இணைந்து சொற்பொழிவு தயாரிப்பாளராக பணியாற்றினார். 1975-ல்சித்திரப்பாவை என்ற நாவலுக்காக ஞானபீட விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1988 ஜனவரி 31-ம் தேதி 66 வயதில் அகிலன் காலமானார்.