

யாரும் செல்லாத பாதையில் பயணம் செய்ததால் எனது வாழ்க்கை மாறியது என்று ஆங்கிலத்தில் பாடி உலகப்புகழ் பெற்றவர் ராபர்ட் ப்ராஸ்ட். இவர் 1874-ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார்.
ராபர்டின் 11 வயதில் தந்தை காசநோயாலும், தாய் புற்றுநோயாலும் மரணமடைந்தனர். பின்னர், இவருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகமாக இருந்ததால், அமெரிக்கவில் உள்ள ஏழை மக்களின் நிலை குறித்து எழுத தொடங்கினார். முதல் நூல் ஒரு சிறுவனின் தீர்மானம் 1913-ல் வெளிவந்தது. 1914-ல் பொஸ்ரனின் வடபுறம், 1916-ல் மலை இடைவெளி உள்ளிட்ட நூல்களில் வெகுஜன மக்களின் வாழ்க்கை நிலை குறித்து எழுதினார்.
1924-ல் நியூ ஆம்ப்ஷையர், 1931-ல் கவிதை தொகுப்பு, 1937-ல்வரம்பிற்கு மேல், 1943-ல்ஒரு சாட்சி மரம் உள்ளிட்ட நூல்களுக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் உயரிய விருதான புலிட்சர் வென்றார். அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் 29 ஜனவரி 1963-ல் காலமானார். இவரை கவுரவப்படுத்தும் வகையில் 1974-ம் ஆண்டு அமெரிக்க அரசு தபால்தலை வெளியிட்டது.