

இந்தியாவின் சிறந்த கட்டிடக்கலைஞர், பால கிருஷ்ணா விட்டல்தாஸ் தோஷி. இவர் 1927-ம் ஆண்டு மும்பையில் உள்ள புனேவில் பிறந்தார். 1960-ம் ஆண்டு அகமதாபாத் அதிரா தொழிற்சாலை மற்றும் தொழிற்சாலை ஊழியர்களுக்கான வீடுகளை வடிவமைத்தார்.
ஐதராபாத்தில் எலக்ட்ரானிக்ஸ் இன்டஸ்ட்ரி, குஜராத் கலோலில் இந்திய விவசாயிகள் உரம் கூட்டுறவு நிறுவனம், உத்தரபிரதேசத்தில் உள்ள ஞான பிரவாக் பண்பாட்டு மையம் ஆகியவற்றை வடிவமைத்தார்.
அகமதாபாத் இந்திய இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மண்ட் (ஐஐஎம்) வளாகத்தின் முகப்பு பகுதியை சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு பசுமையாக வடிவமைத்தார். 1976-ம் ஆண்டு இந்திய அரசின் பத்ம விருது பெற்றார்.
மத்திய பிரதேசம் இந்தூரில் குறைந்த செலவில் கட்டிடம் வடிவமைத்ததற்காக 1996-ம் ஆண்டு கட்டிடக்கலைக்கான ஆகா கான் விருது வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் கட்டிட கலைஞர்கள் சங்கம் ராயல் இன்ஸ்டிடியூட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2023 ஜனவரி 24-ம் தேதி காலமானார். பின்னர், இவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்தது.