

இத்தாலிய எழுத்தாளர், தத்துவவாதி, மொழியியலாளர், மார்க்சிய சிந்தனையாளர் ஆன்டனி கிராம்ஷி. இவர் 1891 ஜனவரி 22-ம் தேதி இத்தாலி நாட்டின் அலெஸில் பிறந்தார்.
கல்வி உதவித்தொகையில் 1911-ம் ஆண்டு டுரின் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். முதலாம் உலகப் போரின் போது மார்க்சிய சிந்தனையை படித்துக் கொண்டிருந்தார்.
1919-ல்புதிய ஒழுங்கு என்ற பெயரில் செய்தித்தாள் தொடங்கினார். இத்தாலியில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினராகவும் பின்னர் அதன் தலைவராகவும் பதவி வகித்தார். இத்தாலியை ஆட்சிசெய்த முசோலினியை கடுமையாக விமர்சித்தார்.
இதனால் 1926-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த போது அவர் எழுதிய 30க்கும் மேற்பட்ட குறிப்பேடுகள், 3 ஆயிரம் பக்கங்களில் வரலாறு, அரசியல் குறித்த பகுப்பாய்வு, சமூகத்தில் பண்பாட்டு மேலாதிக்கத்தின் மூலம் அரசுகள் அதிகாரத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொண்டன என்று குறிப்பிட்டிருந்தார். இதுவே 20-ம் நூற்றாண்டின் அரசியல் கோட்பாட்டிற்கு வழிவகுத்தது.