இன்று என்ன? - குன்சோ இலக்கியப் பரிசை வென்ற முரகாமி

இன்று என்ன? - குன்சோ இலக்கியப் பரிசை வென்ற முரகாமி
Updated on
1 min read

நீ என்னை நினைவில் வைத்திருந்தால் இவ்வுலகமே மறந்தாலும் எனக்கு கவலையில்லை என்றவர் ஹருகி முரகாமி. இவர் 1949 ஜனவரி 12-ம் தேதி ஜப்பானின் ஹோன்ஷூ தீவின் நடுப்பகுதியில் உள்ள கியோத்தோ நகரில் பிறந்தார். ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் 1975-ல் நாடகக் கலையில் பட்டம் பெற்றார். 1979-ல்இவர் எழுதிய முதல் நாவலான ‘ஹியர் தி விண்ட் சிங்’ புதிய எழுத்தாளர்களுக்கான குன்சோ இலக்கியப் பரிசை வென்றது.

2011-ம் ஆண்டு நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.72 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.

நாவல்கள், சிறுகதைகள், கட்டுரை தொகுப்புகள் உட்பட ஏராளமான புத்தகங்களை ஹருகி முரகாமி எழுதியுள்ளார். இதில் பெரும்பாலும் காதல், தனிமை, இருத்தலியல் மற்றும் மனித இருப்பின் மர்மங்கள் ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டு படைத்துள்ளார். இவரின் புத்தகங்கள் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in